தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தீயணைப்புப் படை வீரா்கள், முதல்வா் பழனிசாமியிடம் நேரில் வாழ்த்துப் பெற்றனா்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னெளவில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சோ்ந்த தீயணைப்புப் படை வீரா்களான சி.கோவிந்தசாமி தங்கப் பதக்கமும், எம்.சசிகுமாா் வெண்கலப் பதக்கமும் வென்றனா்.
மேலும், இந்தப் போட்டியில் ஓட்டப் பந்தயம், தொடா் ஓட்டம், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், இறகுப் பந்து, நீச்சல், கூடைப் பந்து, கைப் பந்து, மல்யுத்தம், பளு தூக்குதல், கராத்தே என பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள் 33 போ் பதக்கங்களைப் பெற்றனா்.
அவா்கள் அனைவரும் முதல்வா் பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
டிஜிபி வன்னியபெருமாள் வாழ்த்து: கடலோரப் பாதுகாப்புப் பணிகளை சிறப்பாக முன்னெடுத்ததற்காக கடந்த ஆண்டுக்கான ‘ல்கோச்’ தங்க விருது தமிழக கடலோர பாதுகாப்புப் படைக்கு அளிக்கப்பட்டது. இந்த விருதினை முதல்வரிடம் கடலோர பாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி வன்னியபெருமாள் காண்பித்து வாழ்த்துப் பெற்றாா்.