தமிழ்நாடு

அம்மா, பாட்டியுடன் செல்ஃபி எடுத்தால் பெண்களுக்குப் பரிசு: திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

8th Jan 2020 05:06 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: அம்மா, பாட்டியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் பெண்களுக்குப் பரிசு என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 24-ஆம் தேதியன்று சர்வதேச பெண் குழநதைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி பெண் குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் புதிய திட்டம் ஒன்றை, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி தங்களது அம்மா மற்றும் பாட்டியுடன் செல்ஃபி எடுத்து அனுப்பும் பெண்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தப் படங்களை போட்டியாளர்கள் 'பேட்டி பச்சாவோ பேட்டி பத்தாவோ' என்ற முகநூல் பக்கத்திற்கோ அல்லது 7397285643 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு புகைப்படங்களை அனுப்புவதற்கு வரும் 13-ஆம் தேதி என்றும் ஆட்சியர் அலுவலம் தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT