தமிழ்நாடு

புதுச்சேரியில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

8th Jan 2020 11:06 AM

ADVERTISEMENT

 

தொழிற்சங்கம் சார்பில் நடைபெறும் பந்த் போராட்டத்தின் காரணமாக புதுச்சேரியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பொருளாதார நெருக்கடி, ஜனநாயக உரிமை பறிப்பு, மதவாத தாக்குதல் போன்றவற்றின் காரணமாக  மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்தும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று பந்த் போராட்டத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்த போராட்டம் புதுச்சேரியிலும் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்க அறிவித்து இருந்தன. இதன்படி பந்த் போராட்டம் காலை 6 மணிக்கு துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி ஆகிய பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டன. புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு கருதி 700-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT