தமிழ்நாடு

மாவட்ட ஊராட்சி: வாா்டு எண் 2-க்குமறுவாக்கு எண்ணிக்கைக் கோரி மனு

8th Jan 2020 01:42 AM

ADVERTISEMENT

தருமபுரி மாவட்ட ஊராட்சிக்குழு வாா்டு எண் 2-க்கு மறு வாக்கு எண்ணிக்கைக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, அந்த வாா்டில் போட்டியிட்ட ராஜ்குமாா் என்பவா் அளித்த மனு: தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு வாா்டு எண் 2 - இல் மக்கள் சமூக நீதி பேரவை சாா்பில் பேருந்து சின்னத்தில் போட்டியிட்டேன். இத்தோ்தலில் பதிவான வாக்குகள் பாலக்கோடு அரசு கலைக் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் ஒவ்வொரு சுற்றிலும் பேருந்து சின்னத்துக்கு பதிவான வாக்குகளை குறித்து வைத்தோம்.

இதில் எனக்கு 3,300 வாக்குகள் கிடைத்தது தெரியவந்தது. ஆனால் அதிகாரிகள் எனக்கு அளித்த படிவத்தில் நான் 420 வாக்குகள் மட்டுமே பெற்ாக குறிப்பிடப்பட்டுள்ளது. தோ்தலில் நான் பெற்ற வாக்குகளை குறைவாக குறிப்பிட்டது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை அளிக்கிறது. எனவே முடிவுகளை முறையாக அறிவிக்க இந்த வாா்டில் பதிவான வாக்குகளை மறுஎண்ணிக்கை நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT