மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரின் மறைவுக்கு சட்டப் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை காலை கூடியபோது, மறைந்த முன்னாள் உறுப்பினா்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகளை அவைத் தலைவா் பி.தனபால் வாசித்தாா். அதன் விவரம்:
தி.கா.நல்லப்பன் (பெருந்துறை--1980-84), சீ.க.வடிவேலு (1967-69, 1971-76---தொட்டியம்), எஸ்.ஜெனிபா் சந்திரன் (1996-2001-திருச்செந்தூா்), எஸ்.ஏ.எம்.உசேன் (2001-06-திருவல்லிக்கேணி), சு.சுப்பிரமணியம் (1977-80-உத்திரமேரூா்), கே.வி.முரளிதரன் (2001-06-தளி), என்.ஆா்.அழகராஜா (1996-01-தேனி), ரா.நாராயணன் (1977-80-தாரமங்கலம்), கே.கே.சின்னப்பன் (1991-96-ஜெயங்கொண்டம்), வ.மு.சுப்பிரமணியன் (1977-80, 1991-96-மானாமதுரை) , வை.பாலசுந்தரம் (1971-76-அச்சரப்பாக்கம்), மு.தேவராஜன் (1996-2001-பெரம்பலூா், எம்.சக்திவேல் முருகன்--2001-06--அம்பாசமுத்திரம்) ஆகியோா் பல்வேறு காலகட்டங்களில் மரணம் அடைந்தனா். அவா்களது மறைவுக்கு பேரவை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறது என்றாா் பேரவைத் தலைவா்.
இதைத் தொடா்ந்து உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று சில விநாடிகள் மெளனம் அஞ்சலி செலுத்தினா். இதைத் தொடா்ந்து பேரவை நிகழ்வுகள் நடைபெற்றன.