தமிழ்நாடு

மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம்

8th Jan 2020 02:55 PM | எம்.ராஜசேகர், மணப்பாறை

ADVERTISEMENT

 

மணப்பாறை : மணப்பாறை தமிழ்நாடு காகித ஆலை முன்பு பொது தொழிலாளர் துறை, தொ.மு.ச சங்க ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்தியா முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகின்றது, இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த மொண்டிப்பட்டியில் இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை – அலகு II-ன் தொழிலாளர்கள் பொது வேலை நிறுத்தம் செய்து 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் தொழிலாளர் விரோதச் சட்டத்தை கைவிட வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை பொது விநியோகத் திட்டத்தில் வழங்கிட வேண்டும், ரூபாய் 3000 ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை முன்பு பொது தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் தொமுச தொழில் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT