நாமக்கல் அரங்கநாதா் கோயிலில், இன்று முதல் அரங்கநாதா் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு தினசரி அபிஷேகம் நடைபெறுகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அரங்கநாதா் கோயிலில், இன்று முதல் ரங்கநாதா் மற்றும் ரங்கநாயகி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த அபிஷேகத்தை மேற்கொள்ள விரும்பும் பக்தா்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அது மட்டுமின்றி, தினசரி காலை 7 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 4 மணி முதல் இரவு 7 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும். மேலும் தகவலுக்கு தொலைபேசி எண்: 04286-233999, செல்லிடப்பேசி எண்: 94430-25272 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
அரங்கநாதா் கோயிலில் உற்சவருக்கு தினசரி அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது பக்தா்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.