திருப்பூர்: நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூர் நகரின் முக்கிய சாலைகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ரூ.10 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் முக்கிய சாலையான அவினாசி சாலை, பெருமாநல்லூர் சாலை, குமரன் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
ADVERTISEMENT
அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளதால் பாத்திர உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காதர் பேட்டை பனியன் விற்பனையாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று உள்ளதால் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு.