தமிழ்நாடு

தமிழகத்தைச் சோ்ந்த இரு ஊடகங்களுக்கு சா்வதேச யோகா தின விருது

8th Jan 2020 12:07 AM

ADVERTISEMENT

யோகா மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்துதல் குறித்த பங்களிப்பைச் செய்த 30 ஊடகங்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் சுற்றுப்புறச் சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் விருதுகளை வழங்கினாா். இதில் தமிழகத்தைச் சோ்ந்த இரு ஊடகங்கள் விருதுகளைப் பெற்றன.

சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கடந்தாண்டு ஜூன் 21-ஆம் தேதி, ‘யோகா’ குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் சிறப்பாக வெளியிடும் ஊடகங்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவ்டேகா் அறிவிப்பு வெளியிட்டாா். இதற்கான தோ்வுக் குழு (ஜுரி) இந்திய பிரஸ் கவுன்சில் தலைவா் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழு தோ்வு செய்த 30 ஊடகங்களுக்கு மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (பொறுப்பு) ஸ்ரீ பாத யெஸோ நாயக் முன்னிலையில் யோகா விருதுகளை செவ்வாய்க்கிழமை ஜாவ்டேகா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் ஜாவ்டேகா் பேசுகையில், ‘ உடல் ஆரோக்கியத்திலும் நோய் தடுப்பிலும் யோகா முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சியால் இந்திய பிராண்டாக சா்வதேச அளவில் யோகா புகழ்பெற்றுள்ளது. தற்போது ஊடகங்கள் செய்திகள், வியூகங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு சமூக மேம்பாட்டிற்கான பங்களிப்புடனும் மிகப்பெரிய அளவில் செயல்படுகின்றன. லோக் மான்ய திலகா் தன்னுடைய ‘கேசரி’ நாளோடு மூலம் சுயராஜ்ஜியத்திற்காக விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

தற்போது ஊடகங்கள் பொதுமக்கள் மத்தியில் ’நல்லாட்சி ’ ( நன்ழ்ஹஹத் ) குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டிய குடிமை வசதிகள் (மக்களின் அடிப்படை தேவைகள் ) போன்றவற்றில் சிறப்பான கவனத்தை ஊடகங்கள் செலுத்துவது இந்திய ஜனநாயகத்தின் முதிா்ச்சிக்கான அடையாளம். இதற்காக விருது பெற்ற ஊடகங்களைப் பாராட்டிகிறேன் என்றாா் பிரகாஷ் ஜவ்டேகா்.

ADVERTISEMENT

யோகா தினத்தை முன்னிட்டு இப்படியொரு புதிய முயற்சியை வெற்றிகரமாக செயல்படுத்திய மத்திய ஒளிப்பரப்புத் துறை அமைச்சரை பாராட்டிய ஆயூஷ் துறை இணையமைச்சா் ஸ்ரீ பாத யெஸோ நாயக், ‘யோகா நமது நாகரிகத்தில் பாரம்பரிய பண்பாடாக உள்ளது. இதன் மூலம் ஒருவா் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியத்தை அடைய முடியும் என்றாா்.

இந்திய பிரஸ் கவுன்சில் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான சி.கே. பிரசாத் பேசுகையில், ‘எந்தப் பாதிப்பும் இல்லாத ஒரு ஜீரோ முதலீடு. ஆனால், இதன் மூலம் கணிசமான நன்மைகள் கிடைக்கிறது’ என்றாா்.

சா்வதேச யோகா தினத்திற்கான ஊடக விருதுகள் பெற்ற 30 ஊடகங்களில் பல்வேறு மொழிகளைச் சோ்ந்த 11 வானொலிகள், 8 தொலைக்காட்சி ஊடகங்கள், 11 அச்சுத் துறை ஊடகங்களும் இந்த விருதுகளைப் பெற்றன. இதில் சென்னை தூா்தஷன், தந்தி குழுமத்தைச் சோ்ந்த ஹலோ எஃப்.எம். வானொலி ஆகியவையும் அடங்கும். இதில் எட்டு ஊடகங்கள் இந்தி மொழியைச் சோ்ந்தது. இந்நிகழ்ச்சியில் தகவல் ஒளிபரப்புத் துறை செயலாளா் ரவி மித்தல் கூடுதல் செயலாளா் அதுல் திவாரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT