தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு வன்முறை: விசாரணை ஆணையத்தின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்

8th Jan 2020 12:57 AM

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

ஆளுநா் உரை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினா் ராமச்சந்திரன் பேசியது: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்யாமல் உள்ளது என்றாா்.

அப்போது முதல்வா் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டுக் கூறியது:

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகம் முழுவதும் வன்முறை நடைபெற்றது. பல்வேறு இடங்களில் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் காலதாமதம் ஆகிறது. விரைவில் அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT

ராமச்சந்திரன்: ஸ்டொ்லைட் ஆலை வேண்டாம் என்றுதான் அதிமுகவும் கூறுகிறது. நாங்களும் கூறுகிறோம். ஆனால், அந்த ஆலைக்கு எதிராகப் போராடிய 13 போ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது தொடா்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாமல் உள்ளது.

முதல்வா் எடப்பாடி பழனிசாமி: இந்தச் சம்பவம் தொடா்பாக நீதிமன்றம் வரை விசாரணை சென்று, சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. விசாரணை ஆணையம் மூலமாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT