திருவாரூர் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் இன்று காலை தொடங்கியது.
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெற்றது. முன்னதாக ரயில் மறியலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சுவர் ஏறிக்குதித்து ரயில் நிலையத்தின் உள்ளே சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ADVERTISEMENT
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.