தமிழ்நாடு

காரைக்குடியில் பொது வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட்ட 130 பேர் கைது

8th Jan 2020 01:09 PM

ADVERTISEMENT

 

காரைக்குடி: தனியாருக்கு பொதுத் துறை நிறுவனங்களை விற்பனை செய்வதையும், தொழிலாளர் சட்டங்களை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகத் திருத்துவதையும், மத அடிப்படையில் குடியுரிமைச் சட்டத் திருத்தம் செய்வதையும் கண்டித்தும், அனைத்து தொழிலாளர் சங்க வேலை நிறுத்தக் கோரிக்கைகளை வலியுறுத்த்தியும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 2-வது போலீஸ் பீட் அருகே இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸார் அவர்களைத் தடுத்து எல்.பி.எல் மாவட்டச் செயலாளர் திருநாவுக்கரசு, டி.என்.எஸ்.டி.சி குமார பிரசாத், ஏஐடியு மாநில துணைச் செயலாளர் பிஎல். ராமச்சந்திரன், ஏ ஆர். சண்முகம், ஏ.ஜி. ராஜா, கண்ணன், ராமராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் செ.நா. சாத்தையா, சி.ஐ.டி.யு ஜெயவீரபாண்டியன், அழகர்சாமி, பத்மநாபன் உள்ளிட்ட 97 ஆண்கள், 33 பெண்கள் உள்பட 130 பேர்களை போலீஸார் கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT