தமிழ்நாடு

என்.ஆர்.சி குறித்து பிரதமர் தெளிவாக உள்ளார்: அமைச்சர் சி.வி.சண்முகம் 

8th Jan 2020 02:28 PM

ADVERTISEMENT

என்.ஆர்.சி குறித்து பிரதமர் தெளிவாக உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் அச்சம் ஏற்பட்டுள்ளது.

அச்சத்தை தீர்ப்பது அரசின் கடமை. முகாம்களை எதற்காக அமைக்கிறார்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், என்ஆர்சி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தெளிவாக உள்ளார். 

இந்தியா முழுவதும் என்ஆர்சி அமல்படுத்தப்படும் என பிரதமர் சொல்லவில்லை. வராத என்ஆர்சிக்கு வந்துவிட்டால் என யூகத்தில் பேசினால் பதில் சொல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT