தமிழ்நாடு

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

8th Jan 2020 12:36 PM

ADVERTISEMENT

இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் முருகுமாறன், வீராணம் ஏரியில் பல்வேறு வகையான மீன் வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். 

அதற்கு பதிலளித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கட்லா, ரோகு, ஜெயந்தி ரோகு, கெண்டை உள்ளிட்ட மீன்குஞ்சுகள் இருப்பு வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. வீராணம் ஏரியில் நவீன ரக மீன்வகைகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். உலகத்தில் மீனை விட சிறந்த உணவு எதுவும் இருக்க முடியாது. மீன் சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய், கண் பார்வை கோளாறு உள்ளிட்ட எந்த பிரச்னையும் வராது. 

இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக ஆக முயற்சி செய்ய வேண்டும். ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ஒரு லட்சம் வருமானம் ஈட்டலாம் என்றார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT