தமிழ்நாடு

ஆற்காடு அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்து மேஸ்திரி படுகாயம்

8th Jan 2020 03:14 PM

ADVERTISEMENT

 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நாட்டுத் துப்பாக்கி வெடித்ததில், மேஸ்திரி படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் (38) கட்டிட மேஸ்திரி  இவரது மனைவி ராதிகா( 32 ) இவர் ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில்  உள்ள  தனியார் ஷூ கம்பெனியில்  வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் இன்று  காலை சண்முகம் தனது மனைவியை பைக்கில் அழைத்துக்கொண்டு தாஜ்புரா கூட்ரோட்டில்  வேலைக்குச் செல்வதற்காக விட்டு விட்டு மீண்டும் சாத்தூர் நோக்கிச் சென்றுள்ளார். அப்போது தனக்கு முன்னால் பைக்கில்  சென்ற ஆற்காடு கிளைவ் பஜார் பகுதியைச் சேர்ந்த முரளி( 30 ) நரிக்குறவரான இவர் வேட்டைக்குச் செல்வதற்காக நாட்டுத் துப்பாக்கியை தோளில் மாட்டிக்கொண்டு சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அப்போது களர் கிராமம் அருகே செல்லும்போது முரளி சாலையில் உள்ள வேகத்தடை மீது ஏறி இறங்கும்போது தனது தோளில் மாட்டியிருந்த நாட்டுத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. இதனால் பின்னால் சென்ற சண்முகத்தின் மீது நாட்டுத் துப்பாக்கி வெடித்துள்ளது. இதனால் அவரின் கழுத்து மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு உடனடியாக ஆற்காடு அரசு மருத்துவமனையில் முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றர். மேலும் தப்பி ஓடிய  முரளியைத் தேடி வருகின்றனர். 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT