தமிழ்நாடு

பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி: விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் புதிய அறிவிப்பு

3rd Jan 2020 03:25 PM

ADVERTISEMENT


விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 266 வழித்தடங்களில் இயக்கப்படும் குறைந்த கட்டண குளிர்சாதனம், தொலைதூரம் மற்றும் இடைநில்லா பேருந்துகளுக்கு முன்பதிவு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களுக்கும் மற்றும் புதுச்சேரி, திருப்பதி, காளாஸ்திரி, பெங்களூரு மற்றும் நெல்லூர் ஆகிய பகுதிகளுக்கும், நாள்தோறும் 3,166 பேருந்துகள் மூலம் 16 இலட்சம் கி.மீ. இயக்கப்பட்டு, 16 இலட்சத்து 50 ஆயிரம் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்கிறது.

குறிப்பாக, நகர்புறம் மற்றும் கிராமப்புற மக்கள் பயன்பெறுகின்ற வகையில் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக வரலாற்றில் முதன்முறையாக குறைந்தக் கட்டண குளிர்சாதனப் பேருந்துகள் அண்மையில் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டு 52 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

மேலும், பயணிகள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக 73-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு மையங்கள் / இணையதளம் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி நடைமுறையில் உள்ளது. 

ADVERTISEMENT

இந்த வசதியினை மேலும் விரிவுப்படுத்துகின்ற வகையில், கூடுதலாக 193 வழித்தடங்கள் என ஆகமொத்தம் 266 வழித்தடங்களில் இயக்கப்படுகின்ற பேருந்துகளுக்கு இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த முன்பதிவு வசதியினை, www.tnstc.in ,www.busindia.com , www.paytm.com, www.makemytrip.com , www.redbus.com , www.goibibo.com ஆகிய இணையதளங்கள் வாயிலாக செய்துகொள்ளலாம் என்று விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT