தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு குலுக்கல் முறையில் தேர்வு

3rd Jan 2020 12:20 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நேர்ல கிரி ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் நேர்ல கிரி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்ட நிலையில் கை உருளை சின்னத்தில் போட்டியிட்ட யுவஸ்ரீ மற்றும் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட என் வினா ஆகிய இருவரும் 849 வாக்குகள் பெற்றனர்.

இந்த இரு வேட்பாளர்களும் செம வாக்குகள் பெற்றது எடுத்தேன் இன்று குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தேர்வு கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வட்டாட்சியர் ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இரு வேட்பாளர்கள் முன்னிலையில் இரண்டு சீட்டுகளில் வேட்பாளர்கள் பெயர்கள் பதிவு செய்யப்பட்டு மூன்றாம் நபர் அதாவது பொது நபர் இந்த சீட்டுகளில் ஒரு சீட்டை குலுக்கல் முறையில் எடுத்தார்.

அதில் பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட வீணாவின் சீட்டை அந்த பொது நபர் எடுத்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT