தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவரான 21 வயது கல்லூரி மாணவி

3rd Jan 2020 05:01 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே சேளூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட 21 வயது இளம்பெண் ரோகினி 14 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

கபிலர்மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேளூர் கிராம ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியிட்ட 21 வயது இளம்பெண் ரோகினி இளங்கலை நுண்ணுயிரியல் பயின்றுள்ளார். இவர் தனது வெற்றி குறித்து கூறியதாவது:

எனது கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனது கணவர் சதீஷ்ராஜவிற்கும் இருந்து வந்தது. கணவரின் தூண்டுதலின் பேரில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் சேளூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதிவிக்கு போட்டியிட்டேன். மக்களின் ஆதரவும் மற்றும் எனது குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் முயற்சியால் எனக்கு இந்த வெற்றி கிடைத்தது. எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்த அனைத்து வாக்காள சொந்தங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ADVERTISEMENT

எங்கள் சேளூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவும், பசுமை கிராமமாக மாற்ற அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பது மற்றும் அடிப்படை வசிதிகளை செய்து தமிழகத்தில் சிறந்த ஊராட்சியாக மாற்ற அனைத்து விதமான முயற்சிகளையும் மேற்கொள்வேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்ற ரோகினிக்கு அப் பகுதி மக்கள் வாழ்த்தும்,பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT