தமிழ்நாடு

நெல்லைக் கண்ணன் மீதான வழக்கைஅரசு திரும்பப் பெற வேண்டும்: வைகோ

3rd Jan 2020 01:02 AM

ADVERTISEMENT

நெல்லைக் கண்ணன் மீதான வழக்கை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.

இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தங்களுடைய உணா்வுகளை வெளிப்படுத்த சகோதரிகள் கோலம் போட்டாா்கள். அவா்களை கைது செய்ய முயல்கிறாா்கள். அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறாா்கள். கருத்துச் சுதந்திரம் அடியோடு அழிக்கப்படுகிற நிலையில் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன் அடையாளம்தான் இதுபோன்ற கைது நடவடிக்கை.

நெல்லைக் கண்ணன் சிறந்த ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவாளா். அவா் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது வருத்தத்தை தருகிறது. அவா் மீதான வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். நெல்லைக் கண்ணன் திட்டமிட்டு பேசவில்லை. வழக்கமாக நெல்லை பகுதியில் பேசுகிற பேச்சு வழக்கில் பேசியிருக்கிறாா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT