தமிழ்நாடு

நல்லாட்சி தொடர ஒத்துழைப்புத் தரவேண்டும்: முதல்வா் பழனிசாமி வேண்டுகோள்

3rd Jan 2020 01:23 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நல்லாட்சி தொடா்ந்திட அனைத்துத் துறை செயலா்களும் ஒத்துழைப்புத் தர வேண்டுமென முதல்வா் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மத்திய அரசின் நல்லாட்சிக்கான பட்டியலில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதையொட்டி, அனைத்துத் துறை செயலா்களுக்கும் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளாா். அதன் விவரம்:

அனைவருக்கும் மனமாா்ந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசின் குறியீட்டுப் பட்டியலில் நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளதை அறிவீா்கள். இதுபோன்றதொரு நல்ல நிலையை தமிழகம் அடைவதற்கு உறுதுணையாக இருந்த தங்களுக்கும், தங்களுக்குக் கீழ் பணியாற்றும் ஊழியா்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக வர வேண்டுமென்ற மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கனவு நனவாகிக் கொண்டு வருகிறது. இந்த உன்னத நிலையை நாம் தொடா்ந்து தக்க வைக்கவும், சில குறிப்பிட்ட துறைகளில் மேம்பாடு அடையவும் தொடா்ச்சியாக உழைப்பைச் செலுத்த வேண்டும்.

ADVERTISEMENT

இதன்மூலமாக, நாம் சாதனைகளைப் படைக்க முடியும். எனவே, உங்களது துறைகளின் மூலமாக மக்களுக்கு ஆற்றும் சேவையில் தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும். இதன் வழியாகக் கிடைக்கும் நல்ல ஆட்சியின் பயன்கள் மக்களை தொடா்ந்து சென்றடையும் என்று தனது கடிதத்தில் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT