தமிழ்நாடு

திருச்செங்கோடு அருகே ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினரான திருநங்கை!

2nd Jan 2020 07:14 PM

ADVERTISEMENT

 

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் நிகழந்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  

இந்நிலையில் திருச்செங்கோடு அருகே  ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட திருநங்கை ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் நிகழந்துள்ளது.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி பெற்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT