தமிழ்நாடு

10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு அவசியம்: சிபிஎஸ்இ

2nd Jan 2020 02:40 PM

ADVERTISEMENT


சிபிஎஸ்இ கல்வி முறையில் படித்து 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு 75% வருகைப் பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் வருகை நாட்களை கணக்கில் எடுக்குமாறு அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும், அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளின் வருகைப் பதிவு 75%க்கும் குறைவாக இருப்பின், அவர்கள் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15ம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்குகின்றன. வருகைப் பதிவு உட்பட அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்யும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என்றும், வருகைப் பதிவு குறைவாக இருக்கும் மாணவர்களின் விவரங்கள் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அது பற்றி ஜனவரி 7ம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வருகைப் பதிவு குறைவதற்கு, ஏற்றுக் கொள்ளத்தக்கக் காரணங்கள் ஏதேனும் இருந்தால், அதற்குண்டான சான்றுகளை ஜனவரி 7ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் காலஅவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு புதிய முறைகள் 2020 பொதுத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இரண்டு வகையான கணிதத் தேர்வு, குறைந்த எண்ணிக்கையிலான கேள்விகள் போன்றவையும் உள்ளடங்கும்.
 

Tags : cbse
ADVERTISEMENT
ADVERTISEMENT