தமிழ்நாடு

அவினாசியைத் தொடர்ந்து தஞ்சாவூர்: தொடரும் குலுக்கல் தேர்வுகள்!

2nd Jan 2020 08:44 PM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருவர் சம வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட மாத்தூர் கிழக்கு ஊராட்சியில் ஏ. மலர்விழி, த. மஞ்சுளா உள்பட மொத்தம் 8 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் மலர்விழியும், மஞ்சுளாவும் தலா 409 வாக்குகள் பெற்றனர்.

எனவே, குலுக்கல் முறையில் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்வு செய்யப்படுவார் என தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் அறிவித்தார். பின்னர், இரு வேட்பாளர்கள் முன்னிலையில் மலர்விழி, மஞ்சுளா பெயரை துண்டுச் சீட்டில் எழுதி, அதை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் குலுக்கி போட்டு எடுத்தார். அதில், மஞ்சுளா என்ற பெயர் இருந்தது. இதையடுத்து, மாத்தூர் கிழக்கு ஊராட்சி மன்றத் தலைவராக மஞ்சுளா அறிவிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

முன்னதாக கோவை மாவட்டம் அவினாசி ஊராட்சி ஒன்றியம் அய்யம்பாளையம் ஊராட்சியில் ஒன்றாவது வார்டு பகுதியான சின்ன ஓலப்பாளையம் கிராமத்திலும், உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட  அங்கப்பன் மற்றும் பொன்னுசாமி ஆகிய இருவரும் தலா 47 வாக்குகள் பெற்று சம அளவில் இருந்தனர்.

இதனால் ஏற்பட்ட சூழலில் இரு தரப்பும் ஒப்புதல் கொடுத்ததை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்ததில் அங்கப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT