தமிழ்நாடு

மறுவாக்கு எண்ணிக்கையில் மயங்கிய அதிமுக வேட்பாளர்: பவானியில் பரபரப்பு!

2nd Jan 2020 08:32 PM

ADVERTISEMENT

 

பவானி: பவானி அருகே மறுவாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பவானி ஊராட்சி ஒன்றியம் மூன்றாவது வார்டு அதிமுக வேட்பாளராக தாளகுளம் ஏரிக்கரையைச் சேர்ந்த ராமலிங்கம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வெங்கிடு என்பவரும் சுயேட்சையாக பி சதீஷ் குமார் உள்பட 7 பேர் போட்டியிட்டனர். இவர்களுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

ராமலிங்கம் 1352 வாக்குகளும் சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் 1359 வாக்குகளும் பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் சதீஷ்குமாரை விட 7 வாக்குகள் ராமலிங்கம் பின் தங்கி இருந்தார் இதனால் மறுவாக்குபதிவு கேட்டு விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதை தொடர்ந்து மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் திடீரென மயங்கி சரிந்தார் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

பள்ளி வளாகத்தில் இருந்த பவானி அரசு மருத்துவமனை செவிலியர் ரம்யா துரிதமாகச் செயல்பட்டு ராமலிங்கத்துக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் சுமார் 5 நிமிடத்திற்குப் பின்னர் கண்விழித்த ராமலிங்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மறு வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT