தமிழ்நாடு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் நடத்தும் சிறப்பு முகாம்

2nd Jan 2020 04:23 PM

ADVERTISEMENT


சென்னையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் உங்கள் அருகில் வைப்பு நிதி என்ற சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2020 ஜனவரி மாதத்துக்கான 'உங்கள் அருகில் வைப்பு நிதி' சிறப்பு முகாம், வரும் 10ம் தேதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை சென்னையில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

எனவே, சந்தாதாரர்கள், ஓய்வூதியதாரர்கள், வேலை வழங்குவோர் தங்களது கோரிக்கை ஏதும் இருப்பின், மேற்குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு, வருங்கால வைப்பு நிதி அலுவலக சென்னை மண்டல ஆணையர் -1 ரித்துராஜ் மேதி கேட்டுக் கொண்டுள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT