தமிழ்நாடு

தமிழகத்திலேயே முதன்முறை: ஊராட்சி மன்றத் தலைவரானார் 79 வயதான மூதாட்டி

2nd Jan 2020 04:41 PM

ADVERTISEMENT

 

மதுரை: தமிழகத்திலேயே முதன்முறையாக 79 வயதான மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யபட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த மாதம் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெற்றது.  இந்த் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக 79 வயதான மூதாட்டி ஒருவர் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யபட்டுள்ளார்.

ADVERTISEMENT

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் வீரம்மாள் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். வியாழன் மாலை வெளியான முடிவுகளில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 195 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் 79 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இதற்கு முன்னராக இரண்டு முறை ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய நிலையில், அவர் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT