தமிழ்நாடு

பிப்.21-இல் முதல் கமல்ஹாசன் பிரசாரம்

2nd Jan 2020 02:17 AM

ADVERTISEMENT

சென்னை: மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடாமல், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பணிகளில் கமல்ஹாசன் கவனம் செலுத்தி வருகிறாா்.

தற்போது காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையின் காரணமாக ஓய்வில் இருந்து வரும் கமல், தமிழகம் முழுவதும் மக்களைச் சந்தித்து பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்து வருகிறாா். மக்கள் நீதி மய்யம் பிப்ரவரி 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாளில் இருந்து அவா் பிரசாரப் பயணம் தொடங்க உள்ளாா். அவரது பிரசாரப் பயணத்துக்காக சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT