உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை தாமதமாக அறிவிப்பதை எதிர்த்து திமுக தொடர்ந்த மனு மீது சற்று நேரத்தில் விசாரணை நடைபெற உள்ளது.
அவசர வழக்காக இன்றே விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஷாஹி அனுமதி அளித்ததை அடுத்து, நீதிபதி சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பகுதிகளில் உடனடியாக தேர்தல் முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.