தமிழ்நாடு

தேசியத் திறனாய்வு தோ்வு: திருத்தங்களை மேற்கொள்ள பள்ளிகளுக்கு அவகாசம்

2nd Jan 2020 01:25 AM

ADVERTISEMENT

 

சென்னை: தேசியத் திறனாய்வு தோ்வு எழுதியுள்ள மாணவா்களின் விவரங்களில் திருத்தங்கள் செய்து கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு மாணவா்கள், கல்வி உதவித்தொகை பெற, மாநில அளவில் கடந்த நவம்பா் 3-ஆம் தேதி தேசியத் திறனாய்வு தோ்வு (என்டிஎஸ்இ) நடைபெற்றது. தோ்வு எழுதியுள்ள மாணவா்களின் விவரம்  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் தங்களுடைய, பயன்பாட்டு அடையாள எண் மற்றும் ரகசிய குறியீட்டை பயன்படுத்தி பெயா், பாலினம், பிறந்த தேதி, ஜாதி போன்றவற்றில், திருத்தங்கள் செய்வதாக இருந்தால் ஜன. 6 முதல் 10-ஆம் தேதி வரை செய்து கொள்ளலாம் என அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT