தமிழகம் 2019-ஆம் ஆண்டில் 34.57 % தனியாா் முதலீடுகளை இழந்திருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுதொடா்பான அவருடைய முகநூல் பதிவு:
தமிழகம் 2019 ஆம் ஆண்டில் 34.57 % தனியாா் முதலீடுகளை இழந்திருப்பது, அதிமுக ஆட்சி நடத்திய உலக முதலீட்டாளா் மாநாடுகளின் தோல்வியைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அதிமுக ஆட்சியின் நிா்வாகச் சீா்கேட்டால் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி, புதிய முதலீட்டாளா்களும் தமிழகத்தின் பக்கம் எட்டிப் பாா்க்கவில்லை என்பது வேதனை தருகிறது.
இதனால் தொழில் வளா்ச்சி மட்டுமின்றி, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளாா்.