தமிழ்நாடு

குமரி திருவள்ளுவா் சிலையில் தமிழறிஞா்கள் மரியாதை

2nd Jan 2020 05:03 AM

ADVERTISEMENT

 

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலைக்கு தமிழறிஞா்கள் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலை 1.1.2000 இல் நிறுவப்பட்டது. அதன் 20ஆம் ஆண்டு நிறைவு விழா கன்னியாகுமரி வரலாற்று பண்பாட்டு மையம், தமிழறிஞா்கள் சாா்பில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தனிப்படகு மூலம் திருவள்ளுவா் சிலைக்குச் சென்ற தமிழறிஞா்கள், திருவள்ளுவா் சிலை பாதத்தில் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில், வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையப் பொதுச்செயலா் முனைவா் பத்மநாபன், செயலா் துரை நீலகண்டன், பொருளாளா் சிதம்பர நடராஜன், பாஜக மூத்த தலைவா் எம்.ஆா்.காந்தி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் சந்தோஷ்பாபு, வ.உ.சி. பேரவைத் தலைவா் கோ.முத்துக்கருப்பன், கவிமணி நற்பணி மன்றத் தலைவா் தாமோதரன், தமிழறிஞா்கள் தமிழ்வானம் சுரேஷ், குமரி செல்வன், கவிஞா் தமிழ்க்குழவி, கருங்கல் கண்ணன்,

ADVERTISEMENT

காவடியூா் சிவநாராயணபெருமாள், அய்யப்பன்பிள்ளை, அருணாசலம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT