தமிழ்நாடு

குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் பரபரப்பு 

2nd Jan 2020 12:14 PM | ஜான்சன்

ADVERTISEMENT

 

குன்னூரில் வாக்கு எண்ணும் மையத்தின் அருகே காட்டெருமை புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு பெட்டிகள் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து  இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில், வாக்கு எண்ணும் மையம் அருகே பத்திற்கும் மேற்பட்ட காட்டெருமை கூட்டம் திடீரென புகுந்தது. இதனால் மையத்தின் அருகே காத்திருந்த கட்சி தொண்டர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

ADVERTISEMENT

அதனைத் தொடர்ந்து அதிரடிப் படை, காவல் துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT