தமிழ்நாடு

ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குகள் அனைத்தும் நிராகரிப்பு

2nd Jan 2020 12:34 PM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான தபால் வாக்குகள் முழுவதும் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஒசூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் பதிவான தபால் வாக்குகள் 99. முறையான ஆவணங்கள் இல்லாததால் 99 வாக்குகளும் நிராகரிப்பதாக தேர்தல் அலுவலர் ஆப்தாப் பேகம் அறிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT