உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது.
உள்ளாட்சித்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தலைமை தேர்தல அலுவலகத்தில் தேர்தல் ஆணைர் பழனிசாமியை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று புகார் அளித்தார்.
அப்போது பேசிய அவர், அறிவிக்கப்பட வேண்டிய தேர்தல் முடிவுகளைகூட அறிவிக்காமல் இருக்கிறார்கள். மாவட்ட அளவில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தேன் என்று விளக்கமளித்தார்.
இந்நிலையில் உள்ளாட்சித்தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் செய்வதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மனுவை அவசர வழக்ககாக இன்று விசாரிக்க மறுத்த நீதிமன்றம் நாளை காலை முறையிட அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.