ஓட்டப்பிடாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளாட்சி தேர்தல் தெடர்பான மோதலில் ஒருவர் கல்லால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் மோதல் காட்சிகள் பதிவாகியுள்ளது. அது தற்போது வெளியாகியுள்ளது.
ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு லதா மாசான சாமி என்பவர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இளையராஜா என்பவர் போட்டியிடுகிறார். இவர்களுக்கிடையே தேர்தலில் வெற்றி பெறுவதில் போட்டி இருந்துள்ளது. இந்நிலையில் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் மேட்டூர் வாக்குசாவடி அருகே நின்று கொண்டிருந்த மாசான சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜேசு, ராமசாமி, ஆகியோரை இளையராஜாவின் தரப்பினர் பச்சை பெருமாள், ஜெயம் முருகன் ஆகியோர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
இதில் காயமடைந்த அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினரால் கொண்டு சென்று சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இளையராஜா ஆதரவாளர் மாரியப்பன் தூத்துக்குடி வடக்கு பரம்பு பகுதியில் நின்று கொண்டு இருந்த அவரை ஒரு கும்பல் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.