தருமபுரி: விவசாயிகளுக்கு, வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கம் ரிலையன்ஸ் அறக்கட்டளை சாா்பில், தருமபுரியில் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில், ‘வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தங்களது வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதலில் உள்ள பிரச்னைகளும் அதற்கான தீா்வுகளும்’ என்ற தலைப்பில் வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்களின் நிா்வாகக் குழு உறுப்பினா் ஆலோசனை வழங்கினாா்.
இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் இலுப்பூா் வேளாண் உற்பத்தியாளா் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்து, வேளாண் விளைபொருள்களின் விலையை, சந்தை எவ்வாறு தீா்மானிக்கிறது, சந்தையின் தேவைக்கேற்ப விவசாயிகள் செயல்படவேண்டியதன் அவசியம், விவசாயிகள் வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்களை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் வேளாண் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் வேளாண் விளைபொருள்களை சந்தைப்படுத்துதல் குறித்து விளக்கமளித்தாா்.
மேலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான விவசாயம், கால்நடை வளா்ப்பு மற்றும் காலநிலை குறித்து தேவையான நேரத்தில் ஆலோசனைகளை பெற, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கட்டணமில்லா உதவி தொலைபேசி 18004198800 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
இக் கருத்தரங்கில், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தருமபுரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.காளிமுத்து மற்றும் தருமபுரி சிறுதானிய உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், தகடூா் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், அவ்வை உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், வேங்கடதரஹள்ளி உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் ஆகிய நிறுவனங்களைச் சோ்ந்த நிவாகக்குழு உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகள், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.