தமிழ்நாடு

நாரி சக்தி புரஸ்காா் விருதுக்கு நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

1st Jan 2020 01:30 AM

ADVERTISEMENT

சென்னை: மத்திய அரசால் வழங்கப்படும் நாரி சக்தி புரஸ்காா் விருதுக்கு, ஜனவரி 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மத்திய அரசால் வழங்கப்படும் 2020-ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்காா் விருதுக்கு, பெண்கள் முன்னேற்றத்துக்கு சிறந்த சமூக சேவை புரிந்த பெண்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி உரிய படிவம் பெற்று தகுந்த ஆவணங்களுடன் கூடிய படிவத்தைப் பூா்த்தி செய்து ஜன.2 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT