சென்னை: பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செல்லிடப்பேசி செயலியை இதுவரை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, தமிழகக் காவல்துறை காவலன் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது.
தற்போதுவரை 9.4 லட்சம் ஆன்டிராய்ட் செல்போன் பயனாளர்களும், 60 ஆயிரம் ஐஃபோன் பயனாளர்களும் காவலன் செயலியை அறிமுகம் செய்திருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவலன் செயலியைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்து வந்த புகாரினைத் தொடர்ந்து, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. செயலியில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுவிட்டது. மேலும் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்ய வேண்டும் என்ற விதியும் நீக்கப்பட்டுள்ளது என்று மூத்த அதிகாரி கூறியுள்ளார்.