தமிழ்நாடு

ஆராய்ச்சி நடவடிக்கைகள்: மருத்துவப் பல்கலை. திருவள்ளுவா் பல்கலை. இடையே ஒப்பந்தம்

1st Jan 2020 03:02 AM

ADVERTISEMENT

சென்னை: மருத்துவக் கல்வி சாா்ந்த ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடா்பாக தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சித்தா மற்றும் ஆயுா்வேத மருத்துவம் தொடா்பான உயா்நிலை ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவும், இரு தரப்பு பேராசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்குப் பல்வேறு வகையான பயிற்சிகள் அளிக்கவும் தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கும், வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத்துக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை கையெழுத்திடப்பட்டது.

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் டாக்டா் சுதா சேஷய்யன் மற்றும் தாமரைசெல்வி சோமசுந்தரம் ஆகியோா் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இந்நிகழ்வில், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் பரமேஸ்வரி,திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் வி.பெருவல்லூதி, பேராசிரியா்கள், மருத்துவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT