குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
ஆங்கிலப் புத்தாண்டு 2020 இன்று பிறந்துள்ளது. இதையொட்டி, தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இரவுமுதலே புத்தாண்டுக் கொண்டாட்டம் களைகட்டியது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பி வைத்திருக்கிறார்.
இதேபோல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கும் அவர் வாழ்த்து கூறி கடிதம் அனுப்பி உள்ளார்.