தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் 15 ஆண்டுகளுக்குப் பின் ஜல்லிக்கட்டு

29th Feb 2020 10:02 AM

ADVERTISEMENT

 

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் வீரமுனியாண்டவர் வீர விளையாட்டுக் கழகம் சார்பில் ஜல்லிக்கட்டு விழா சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இக்கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த விழாவை கோட்டாட்சியர் எம். வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

களத்தில் விடுவதற்காக 700-க்கும் அதிகமான காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து திறந்துவிடப்பட்டு வருகிறது. 

காளைகளைப் பிடிப்பதற்காக ஏறத்தாழ 500 பேர் பங்கேற்றுள்ளனர். மாலை வரை நடைபெறவுள்ள இந்த விழாவை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT