தமிழ்நாடு

ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் அபூபக்கர் சந்திப்பு

29th Feb 2020 10:39 AM

ADVERTISEMENT

 

சிஏஏவால் முஸ்லிம்களுக்கு ஆபத்து இருப்பதாக ரஜினியை சந்தித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்தியர்கள் தான் என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டித் தலைவர் அபூபக்கர், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

முன்னதாக, சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்துடன் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர் சனிக்கிழமை காலை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பு இருப்பதாக ரஜினியிடம் அபூபக்கர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT