தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.32,512

29th Feb 2020 12:51 AM

ADVERTISEMENT

சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டது.

குறிப்பாக, கடந்த 24-ஆம் தேதி தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது. அன்றைய நாளில், ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பிறகு, கடந்த 3 நாள்களாக தங்கம் விலை குறைந்துவந்தது. மேலும், தங்கம் விலை குறையும் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ரூ.32,512-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.4,064-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை கணிசமாகக் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.90 குறைந்து ரூ.49 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,900 குறைந்து ரூ.49,000 ஆகவும் இருந்தது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,064

1 பவுன் தங்கம் ..................... 32,512

1 கிராம் வெள்ளி .................. 49.00

1 கிலோ வெள்ளி ................. 49,000

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,064

1 பவுன் தங்கம் ..................... 32,512

1 கிராம் வெள்ளி .................. 50.90

1 கிலோ வெள்ளி ................. 50,900

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT