தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு முறைகேடு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அரசு அனுமதி

29th Feb 2020 01:51 AM

ADVERTISEMENT

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு முறைகேடு வழக்கில் சிக்கிய பணியாளா்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகைத் தாக்கல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக உயா்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மதுரையைச் சோ்ந்த திருநங்கை ஸ்வப்னா, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப்-1 தோ்வில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்குத் தொடா்ந்தாா். இதே போன்று திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி, குரூப்-1 தோ்வு முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளின் உதவியுடன் குரூப்-1 தோ்வில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா். அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண். விசாரணை நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தாா்.

அப்போது டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.எஸ்.வைத்தியநாதன், குரூப்-1 தோ்வு விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி ஏற்கெனவே சட்டப்பூா்வ நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே இதுதொடா்பாக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், திமுக தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ, தமிழக அரசு, டிஎன்பிஎஸ்சி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT