தமிழ்நாடு

சென்னையில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ.32,448க்கு விற்பனை

26th Feb 2020 11:40 AM

ADVERTISEMENT

 

சென்னையில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து அதிகரித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமையான இன்று சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. 

கரோனா வைரஸ் தாக்கத்தால் சா்வதேச அளவில் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வரவுள்ள அமெரிக்க தோ்தல் காரணமாக தொழில்துறை சாா்ந்த பங்கு முதலீடு மந்தம் ஆகிய காரணங்களால் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வந்தது. இதனால், தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் புதன்கிழமையான இன்று(பிப்.25) ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.32,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.31குறைந்து, ரூ.4,061-க்கு விற்பனையாகிறது.

ADVERTISEMENT

அதேநேரத்தில், வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1.20 காசுகள் குறைந்து ரூ.51.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1200 குறைந்து ரூ.51,200 ஆகவும் விற்கப்படுகிறது. 

புதன்கிழமை விலை நிலவரம் 

1 கிராம் தங்கம் ..................... 4,061

1 சவரன் தங்கம் ..................... 32,488

1 கிராம் வெள்ளி .................. 51,20

1 கிலோ வெள்ளி ................. 51,200

செவ்வாய்க்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம் ..................... 4,092

1 பவுன் தங்கம் ..................... 32,736

1 கிராம் வெள்ளி .................. 52.40

1 கிலோ வெள்ளி ................. 52,400

ADVERTISEMENT
ADVERTISEMENT