தமிழ்நாடு

தத்தெடுத்த கிராமத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்திய விசிக எம்.பி. ரவிக்குமார்

26th Feb 2020 02:28 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் அருகே தத்தெடுத்த கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி துரை.ரவிக்குமார், புதன்கிழமை வேலைவாய்ப்பு முகாம் நடத்தினார். 

திருவெண்ணைநல்லூர் வட்டாரத்திலுள்ள காந்தலவாடி கிராமத்தை, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் தத்தெடுத்தார்.

கிராம முன்னேற்றத்துக்கு பல திட்டங்களை செய்து வந்து கொண்டிருக்கும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் காந்தலவாடி கிராமத்தில், இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் எம்பி ரவிக்குமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது

ADVERTISEMENT

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய வேலைவாய்ப்பு முகாமில், மொத்தம் 32 நிறுவனங்கள் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்புக்காக 801 நபர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் 136 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. முகாமில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT