தமிழ்நாடு

நீட் ஆள்மாறாட்ட விவகாரம்: மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவர் கைது

26th Feb 2020 12:21 PM

ADVERTISEMENT

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மேலும் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 

நீட் தோ்வில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், மேலும் ஒரு வழக்கை சிபிசிஐடி போலீசார் அண்மையில் பதிவு செய்தது. இதுதொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவன் தனுஷ் மற்றும் அவரது தந்தையைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இந்நிலையில் 2 நாள் விசாரணைக்குப் பிறகு மாணவர் மற்றும் அவரது தந்தையை சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான மாணவனுக்கு இந்தி மொழி தெரியாத நிலையில் 2018-ஆம் நடைபெற்ற நீட் தேர்வை பிகாரில் இந்தி மொழியில் எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்க்கது. 
 

Tags : CBCID
ADVERTISEMENT
ADVERTISEMENT