தமிழ்நாடு

மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

26th Feb 2020 12:35 PM

ADVERTISEMENT

 

தில்லியின் நொய்டா பகுதியில் அமைந்துள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

வடகிழக்கு தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே வன்முறை தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது, 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதையடுத்து சில பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த நிலையில், தில்லியின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள நொய்டாவின் செக்டார் 20, 24 மற்றும் செக்டார் 39 ஆகிய பகுதிகளில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை என அனைத்து வகை மதுக்கடைகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவித்து கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் பி.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Liquor shops
ADVERTISEMENT
ADVERTISEMENT