தமிழ்நாடு

தில்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன்: ரஜினி பரபரப்பு பேச்சு

26th Feb 2020 07:33 PM

ADVERTISEMENT

 

சென்னை: தில்லி வன்முறைக்காக மத்திய அரசைக் கண்டிக்கிறேன் என்று நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் வாயிலில் பத்திரிகையாளர்ளை புதன் மாலை நடிகர்  ரஜினி  சந்தித்தார். அப்போது தில்லி வன்முறை சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷங்கள் தொடர்பான பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

தில்லி வன்முறைச்  சம்பவங்கள் என்பது மத்திய உளவுத்துறையின் தோல்வி. இதற்காக மத்திய அரசை நான் கண்டிக்கிறேன்

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகை தந்திருந்த சமயத்தில் இத்தகைய வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பது தெளிவாக உளவுத்துறையின் தோல்விதான்.  

இந்தப் போராட்டங்களை ஆரம்பத்திலேயே அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால்தான் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சொன்னேன்

ஒரு சிலர் மற்றும் சில அரசியல் காட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது சரியான போக்கு இல்லை. எதிர்காலத்தில் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும்

பாஜகவில் ஒரிருவர் வன்முறையை தூண்டும் விதமாக பேசினால் உடனே எல்லாரையும் சேர்த்து பொதுப்படையாக எழுத வேண்டாம் என்று ஊடகங்களை நான் இரு கை எடுத்துக் கேட்டுக் கொள்கிறேன்.   

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த சிஏஏ  சட்டத்தை எனக்குத் தெரிந்த வரை இந்த அரசு வாபஸ் வாங்கப் போவது இல்லை. இதைச் சொல்வதால் நான் பாஜகவின் ஊதுகுழல்; என் பின்னால் பாஜக இருக்கிறது என்று சொக்லவார்கள்.  ஆனால் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சில மூத்த அரசியல் விமர்சகர்களே அவ்வாறு பேசுவது வருத்தமாக உள்ளது.  நான் எப்போதும் எனக்குத் தெரிந்த உண்மையையே சொல்கிறேன். 

என்.ஆர்.சி தொடர்பாக அரசு விளக்கம் கொடுத்த பிறகு மீண்டும அதைப் பற்றிப் பேசிக் குழப்பக் கூடாது.  

எந்தப் போராட்டமும் அமைதி வழியில் நடைபெறலாம். ஆனால் அந்தப் போராட்டம் வன்முறை ஆகக் கூடாது.வன்முறையை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ராஜிநாமா செய்யுங்க.ள்  

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT