தமிழ்நாடு

வேன் கவிழ்ந்து விபத்தில் 16 பேர் படுகாயம்

26th Feb 2020 08:15 PM

ADVERTISEMENT

 

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த நம்பரை கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் ஒரு சுப நிகழ்ச்சிக்காக  புதன்கிழமை  வேனில்  கலவை  சென்றனர்  பின்னர் விழா முடிந்தவுடன் மீண்டும் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தனர்  வேனில் 14 பெண்கள்  2 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர்  பயணம் செய்துள்ளனர்.   

அப்போது  வேன் திமிரி அருகே உள்ள குண்டலேரி கூட்ரோடு  அருகே வரும்போது எதிரே வந்த பைக்கிற்கு  வழி விடுவதற்காக வேன் ஓட்டுநர்  முத்து  வேனை திருப்பியுள்ளார் அப்போது நிலைதடுமாறிய வேன் சாலையோரம்   கவிழ்ந்து  விபத்துக்குள்ளானது.

இதில் பயணம் செய்த நம்பரை கிராமத்தைச் சேர்ந்த ஜனாபாய்( 45) லட்சுமி (45)ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்ற நபர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் மேலும் இச்சம்பவம் குறித்து திமிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றன

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT